"திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!
70 வயது மூதாட்டிக்கு இப்படி ஒரு கொடுமையா.? அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி.!

நாமக்கல் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு அதிரடி தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம்.
நாமக்கல் மாவட்டம் சேத்தமங்கலம் அருகே இருக்கின்ற பேளுக்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவரது தோட்டத்தில் தங்கராஜ்37) என்பவர் கூலி வேலை செய்து வந்திருக்கிறார்.
கடந்த 2018 ஆம் வருடம் நவம்பர் மாதம் மூதாட்டி தனது வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த தங்கராஜ் மது போதையில் மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்று இருக்கிறார். அவரிடமிருந்து தப்பித்த மூதாட்டி இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்தார் .
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் தங்கராஜை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இது தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஹரிஹரன் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தங்கராஜிற்கு ஒரு வருட சிறை தண்டனையும் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு அளித்தார் .