மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவர் சந்தேகப்பட்டதால் மனைவி எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் குடும்பத்தினர்.!
திருப்பூர் அருகே கணவர் சந்தேகப்பட்டதால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் சேர்ந்த தம்பதியினர் சுரேஷ்- சொர்ணகலா. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சமீப நாட்களாக சுரேஷ் தனது மனைவி மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதில் சுரேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றதும் சொர்ணகலா வீடியோ ஒன்றை பதிவு செய்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த வீடியோவில் எனது சாவிற்கு கணவர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம். எனது மகளை தனது பெற்றோரும், இரு தங்கைகளும் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த வேலம்பாளையம் போலீசார் சொர்ணகலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வீடியோ ஆதாரங்களை வைத்து சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.