அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியின் வாழ்க்கையை சீரழித்த திருமணமான இளைஞர்!
மதுரை அருகே ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் திருமணமான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை கோச்சடையை சேர்ந்தவர் கொத்தனார் சங்கர். திருமணமான இவர் வேலை தொடர்பாக தஞ்சை அருகே உள்ள பூதலூருக்கு சென்றுள்ளார். அப்போது 9ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில், மாணவி உடல்நல குறைவால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி சங்கர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை தற்போது நடைபெற்ற நிலையில் குற்றவாளி சங்கருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், பதினைந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.