திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மயக்க மருந்து கொடுத்து கணவரை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 35 வயதான பெண், கணவரை இழந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்து வருகிறார். அங்கு அவருடன் வேலை செய்து வந்த முகப்பேர் பகுதியை சேர்ந்த இந்திரஜித் என்பவர் அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி நெருங்கி பழகிய நிலையில், கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மயக்கம் தெளிந்தவுடன் அந்தப் பெண் கேட்டபோது, உன்னை பாலியல் பலாத்காரம் சேர்த்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளேன். இதுகுறித்து வெளியில் சொன்னால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் அந்த வீடியோவை வைத்து அடிக்கடி மிரட்டி அந்த பெண்ணிடம் பணம் மற்றும் நகை கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த அப்பெண் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பலாதாரம், மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இந்திரஜித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.