ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஒரு தலை காதல்.. திருமணமான பெண் கடத்தல் முயற்சி.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
புதுச்சேரி திருக்கனூர் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், தமிழகத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்கள் லிங்காரெட்டி பாளையத்தில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே அந்த இளம் பெண்ணை புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞன் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் அந்த இளம் பெண்ணை தன்னுடன் வந்துவிடுமாறு தினேஷ் தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து தனது கணவருடன் தான் வாழ்வேன் என கூறியுள்ளார்.
இந்த நிலையில் தினேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆயுதங்களுடன் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டுக்குள் புகுந்து கடத்த முயற்சி செய்துள்ளனர். இதில் அந்த பெண் கத்தி கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதை கண்டு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனிடையே அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணை கடத்த முயற்சித்த தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.