திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழகத்தின் பொற்கால ஆட்சியை முதல்வர் தருகிறார் : வைகோ நெல்லையில் முழக்கம்..!
திராவிட மாடல் ஆட்சியானது இரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட கோட்டை ஆகும். அதனை யாராலும் தகர்க்க இயலாது என வைகோ பேசினார்.
திருநெல்வேலியில் வைத்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "திராவிட மாடல் ஆட்சியானது மிகவும் வெற்றிகரமாக முதல்வர் மு.க ஸ்டாலினால் நடத்தப்படுகிறது. இது தமிழகத்தின் பொற்கால ஆட்சியாகும். மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு பதில் திராவிட மாடல் ஆட்சியானது நடக்கிறது. ஆதிக்க & சங்க் பரிவார் சக்திகள் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயல்கிறது.
அவர்களால் தமிழகத்தை ஒருபோதும் கைப்பற்ற இயலாது. பல தேசிய இனங்கள் இணைந்து உருவான நாடே இந்தியா. திராவிட இயக்க சக்தியாளர்கள் தமிழுணர்வு கொண்டவர்கள். வீறுகொண்டு எழுந்து திராவிட கோட்டையை பாதுகாப்பார்கள். திராவிட ஆட்சிக்கு நாம் அரணாக இருந்து இந்துத்துவாவை முறியடிக்க வேண்டும். திராவிட சக்தியின் உணர்வாலேயே இந்துத்துவா சக்திகள் தமிழகத்தில் காலடி எடுத்து வைக்க இயலவில்லை. திராவிட மாடல் ஆட்சி இரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட கோட்டை" என்று பேசினார்.