'துணியில்லாம நடுரோட்ல நின்னேன்.' சித்தப்பு சரவணனின் மோசமான அனுபவம்.. கண்ணீர் விட்ட நடிகர்.!
ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கிய சம்பவம்... அதிர வைத்த வாக்குமூலம்..!
ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகள் வாங்கி, விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள பல்லாவரம், ஜீவாநகர், அரியான் தெருவில் வசித்து வருபவர் கார்த்திக் (வயது 24). இவர் வெல்டராக பணியாற்றி வரும் நிலையில், பல்லாவரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இவரை காவல்துறையினர் சோதனை செய்த நிலையில், இவரிடம் இருந்த ஒரு பையில் ஒரே மாதிரியான மாத்திரை அட்டைகள் அதிகமாக இருப்பதை கண்டுள்ளனர்.
இதன் காரணமாக அவர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர், பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர் போதை மாத்திரைக்கு அடிமையானதும், இதன் காரணமாக ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து வாங்கி பயன்படுத்தியதும் தெரியவந்தது. தொடர்ந்து இதனை மற்றவர்களுக்கும் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கும் இந்த போதை மாத்திரையை, ஊசிமூலம் உடலில் செலுத்தினால் நாள் முழுவதும் போதையாக இருக்க முடியும் என்று அவர் கூறியிருக்கிறார். இதனால் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்த 260க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.