மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் பார்க்க கூட யாருமில்ல.. திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் விபரீதம்.. கதறும் குடும்பத்தினர்..!
கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர், வாலி சோதனைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை. மேலும் வீட்டில் பெற்றோரிடம் தனக்கு பெண்பார்த்து திருமணம் செய்து வைக்க பலமுறை கோரிக்கை வைத்ததாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் தனக்கு வரன் பார்க்க வேண்டும் என்று பெற்றோரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இவர்களுக்குள் கடுமையான பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அதனால் மனமுடைந்த குமரன் திருமணமாகாத ஏக்கத்தில் விஷம் குடித்து இருக்கிறார்.
அவரை உயிருக்கு போராடும் நிலையில் மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக கடலூர் முதுநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.