மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆன்லைன் ரம்மியால் கொடூரம்... மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு இளைஞர் விபரீத முடிவு..!
இளைஞர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டில் 18 லட்சம் ருபாய் இழந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முத்தானூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் தனியார் கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாயும், கேரளா லாட்டரியில் 3 லட்சம் ரூபாயும் அவர் இழந்ததாக கூறப்படுகிறது.
தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த பிரபு, பணம் இழந்த மன உளைச்சலில் இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் சொந்த வீட்டை விற்பதற்காக முன்பணம் பெற்று, ஆன்லைன் ரம்மி விளையாடி சுமார் 18 லட்சம் ரூபாயை பிரபு இழந்தது தெரியவந்தது. இதன் காரணமாகவே அவர் மனமடைந்து தற்கொலை செய்துள்ளார்.
ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் முன்பே பணத்தை இழந்து காவலர் மற்றும் வங்கி ஊழியர் உயிரிழந்த நிலையில், மீண்டும் இது போன்ற ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. இனியாவது மக்கள் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை நம்பி பணம் இழக்காமல் இருப்பதுடன், தன் குடும்பத்தையும் பாதியில் விட்டு செல்லாமல் இருக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.