மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கூலிப்படை ஏவி... பூட்டிய வீட்டிற்குள் வைத்து தாய், மகன் எரித்துக் கொலை...!
ஊத்தங்கரை அருகே தாய்யும் மகனனையும் பூட்டிய வீட்டிற்குள் வைத்து எரித்துக் கொலை செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவரன தெருக்கூத்து கலைஞர் செந்தாமரை கண்ணன் (55). இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டில் உள்ளார். இரண்டாவது மனைவி கமலா (50). இவருடைய மகன் குரு (17). இவர், நேற்று முன்தினம் ஐ.டி.ஐ.யில் சேர்ந்து இருந்தார்.
இவர்கள் இருவரும் செங்கல்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். நேற்று காலை அவர்களின் வீட்டில் இருந்து புகை வந்தது. இதை அக்கம்பக்கத்தினர் பார்த்தனர். அப்போது அவர்கள் வீடு உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. வீட்டுக்குள் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கது வீட்டில் உள்ளவர்கள் கல்லாவி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
உடனே கூடுதல் காவல் சூப்பிரண்டு சங்கு, ஊத்தங்கரை துணை காவல் சூப்பிரண்டு அலெக்சாண்டர், கல்லாவி இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் தாய் - மகன் இரண்டு பேரும் கருகிய நிலையில் கிடந்தனர். அவர்கள் இருவரையும் எரித்துக் கொலை செய்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு சோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செந்தாமரை கண்ணனின் இரண்டாவது மனைவி கமலாவிற்கும், அவரது கணவரின் மூன்றாவது மனைவி சத்யாவுக்கும் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் சத்யா, ஆட்களை வைத்து அவர்கள் தூங்கும் போது பூட்டிய வீட்டில் வெளிப்புறமாக இருந்து, ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தாய், மகன் இருவரையும் கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர், சத்யாவை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக கல்லாவி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சத்யா ஆட்களை வைத்து கொலை செய்திருந்தால் அது கூலிப்படையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடநந்து வருகிறறது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.