மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் அதிரடி குறைப்பு.! முதல்வரின் அறிவிப்பால், குஷியில் பொதுமக்கள்.!
சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அரசு பிறப்பித்த தளர்வுகளின் அடிப்படையில் மெட்ரோ ரயில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போதுவரை பயணிகளிடம் அதிகபட்ச கட்டணமாக ரூ.70 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை குறைக்க அனைத்து தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மெட்ரோ ரயில் சேவையை பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய கட்டண விவரத்தை நேற்று வெளியிட்டது. அதன்படி டோக்கன் முறையில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சமாக இருந்த ரூ.70 கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
2 கி.மீ. வரை தற்போது வசூலிக்கப்பட்டு வரும் 10 ரூபாய் என்ற கட்டணத்தில் மாற்றமில்லை என்றும், 2 கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை இனி, 20 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 5 கிலோ மீட்டர் முதல் 12 கிலோ மீட்டர் வரை 30 ரூபாய், 12 கிலோ மீட்டர் முதல் 21 கிலோ மீட்டர் வரை 40 ரூபாய், 21 கிலோ மீட்டர் முதல் 32 கிலோ மீட்டர் வரை 50 ரூபாய் கட்டணம் என நிர்ணயக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பயண அட்டை மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு பத்து சதவீதமும், கியூஆர் குறியீடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதிகபட்ச மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.70ல் இருந்து ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் தமிழக முதல்வருக்கு இணையம் வாயிலாக நன்றியை தெரிவித்துள்ளனர்.