தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தமிழகத்திற்கு இனி யாரும் தண்ணீர் விடவேண்டாம்!. தமிழகத்திற்கு இயற்கை பகவான் அளித்த பரிசு!.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் டெல்டா பாசனத்துக்கு நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார். நேற்று காலை 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வெளியேற்றம் நேற்று இரவு முதல் 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து 112 அடியாகஉயர்ந்துள்ளது. இன்னமும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்திற்கு போதுமான நீர் கிடைத்துவிடும் என விவசாயிகள் நம்புகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கர்நாடக அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 35,625 ஆயிரம் கன அடியாகவும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 85,625 கன அடியாக உள்ளது. நீர் வரத்தை குறைத்தும், ஏற்றியும் வெளியிட்ட போதிலும், மேட்டூர் அணை சீராக நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.