திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நாமக்கலில் பயங்கரம்... வடமாநில இளைஞர்கள் படுகொலை.!! குற்றவாளிகளுக்கு வலை வீச்சு.!!
நாமக்கல் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஒடிசா தொழிலாளர்கள்
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்களான முன்னா(21) மற்றும் துகாஸ்(29) ஆகியோர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வந்தனர். இவர்களுடன் வட மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு தொழிலாளர்களும் அங்கு பணியாற்றி வருகின்றனர்.
சடலமாக மீட்பு
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று பள்ளிபாளையம் பாதரை அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடை முன்பு துகாஸ் மற்றும் முன்னா ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த நபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போதை கொடுமை... உயிரை மாய்த்து கொண்ட தொழிலாளி.!! போலீஸ் விசாரணை.!!
முதல் கட்ட விசாரணை
இந்நிலையில் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் 4 பேர் மது குடிக்க வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் முன்னா மற்றும் துகாஸ் ஆகியோர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்திருக்கிறது. மேலும் கொலை நடந்த இடத்தில் நாமக்கல் மாவட்ட எஸ்பி நேரில் வந்து ஆய்வு நடத்தினார். எனினும் இந்த கொலை சம்பவம் நடந்ததற்கான காரணம் குறித்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னரே தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அந்தோ.. பரிதாபம்... பிரசவத்தில் தாய், சேய் பலி.! அரசு மருத்துவமனை மீது புகார்.!