தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஸ்டாலின் காந்தியும் இல்லை, நான் புத்தனும் இல்லை! விளாசி தள்ளிய அதிமுக அமைச்சர்!
தேர்தலை சந்திக்க தைரியமில்லாமல் திமுக தலைவர் தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தும் வகையில் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தேர்தலை நிறுத்தி சீர்குலைக்கும் வகையில் திமுக தேர்தல் ஆணையத்தை அச்சுறுத்தி வருகிறது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திமுகவுக்கு குட்டு வைத்துள்ளார். எனவே திமுக தலைவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
மேலும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்கப்படுவதாகவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார்.
ஸ்டாலின் காந்தியும் இல்லை, நான் புத்தனும் இல்லை. அவர் முதுகில் ஆயிரம் அழுக்கை வைத்து கொண்டு என்னை தனிப்பட்ட முறையில் பேசுகிறார். என்னை தனிப்பட்ட முறையில் பேச ஸ்டாலினுக்கு எந்த உரிமையும் இல்லை என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.