ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படியுள்ளது? அறுவை சிகிச்சை எப்பொழுது? அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்!!
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்நிலையில் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டதில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யவேண்டும் என அவரது மனைவி கோரிக்கை வைத்து மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்றிரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் மருத்துவர்கள் அதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு இரத்த நாளங்களில் அடைப்பு இருந்ததால் ஓமந்தூரார் மருத்துவமனையில் பிளட் தின்னர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடலில் இரத்த கசிவு போன்ற பிரச்சனைகளை ஆராய்ந்து விட்டு மூன்று அல்லது நான்கு நாட்களில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.