மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது; அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி.! அலறும் அரசியல் வட்டாரம்.!
அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து, அவரின் சகோதரரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் வருமான வரித்துறை & அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் அமைச்சராக பணியாற்றிய செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் விசாரணை நடைபெற்று வந்தது.
சோதனையின் போது பல்வேறு சர்ச்சையான நிகழ்வுகள் நடந்து, செந்தில் பாலாஜி இரவோடு இரவாக சென்னை இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவருக்கு அப்போதே நெஞ்சு வலி ஏற்பட்டு, நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அசோக் குமார் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக இலஞ்சம் வாங்கிய வழக்கில், விசாரணைக்கு ஆஜராக சம்மன் பலமுறை வழங்கியும் எந்தவிதமான பதிலும் இல்லை. இதனால் அவரை கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகளால் அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை அங்கிருந்து சென்னை அல்லது டெல்லி அலுவலகம் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அசோக் குமாரின் சொத்துக்கள் அனைத்தும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.