டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் விவகாரம்; அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வது என்ன? விபரம் உள்ளே.!



minister senthil balaji On tasmac scam Rs 1000 Crore ED Raid 

 

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மதுபான உற்பத்தி & விற்பனை அலுவலகமான டாஸ்மாக்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி அளவு ஊழல் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மோசடி குற்றசாட்டு

ஏற்கனவே துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி, வேறொரு மோசடி வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று ஜாமினில் வந்தார். தற்போது மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். இதனிடையே, அவர்வசம் உள்ள மதுவிலக்கு துறையில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றசாட்டு முன்வைத்து இருக்கிறது.

இதையும் படிங்க: #BigBreaking: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் அம்பலம் - அமலாக்கத்துறை அறிவிப்பு.!

இந்த விஷயம் குறித்து அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த பதிவில், "டாஸ்மாக் பணியாளர்கள் பணியிட மாறுதல் தொடர்பான உத்தரவு, குடும்ப நிலை, மருத்துவம் உட்பட பல்வேறு விஷயத்திற்காக வழங்கப்படுகிறது. மூடப்பட்ட கடையில் வேலை பார்த்த 2157 பணியாளர்களுக்கு 2023 ல் கலந்தாய்வு மூலமாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

முறைகேடுக்கு அமைச்சர் மறுப்பு

tasmac

அதேபோல, போக்குவரத்து ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, குறைவான தொகையை கோரிய நபருக்கு இறுதி செய்யப்பட்டது. கே.ஒய்.சி உட்பட அணைத்து விபரமும் சரிபார்க்கப்ட்டது. அனைத்தும் அரசின் விதிகள்படி முறைகேடு இன்றி நடைபெற்றது. கடந்த காலங்களில் கோரப்பட்ட ஒப்பந்த முறைகளில் உள்ள பிரச்சனை காரணமாக, அதனை புறக்கணித்து புதிய முறைகளில் ஒப்பந்தங்கள் கூறப்பட்டன.

ஆட்சியர், கலால் உதவி ஆணையர், மாவா மேலாளர் என கூட்டுக்குழு விண்ணப்பதாரரின் ஒப்பந்தத்தை இறுதி செய்கிறது.  டாஸ்மாக் வருமானம் அதிகரித்தது சட்டவிதிகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் காரணமாக மட்டுமே. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளது என கூறப்படுவதால் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. சட்டரீதியான போராட்டம் முன்னெடுக்கப்படும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: #Breaking: டெல்லி, சத்திஸ்கர் போல தமிழ்நாட்டில் மாபெரும் மதுபான ஊழல்? அண்ணாமலை சூசகம்.!