#Breaking: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை; துப்பாக்கி ஏந்திய வீரர் பாதுகாப்பு.!



Minister Senthil Balaji Supporters Enforcement Directorate Raid 

 

தமிழ்நாடு மின்வாரியத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருபவர் செந்தில் பாலாஜி. இவர் சமீபத்தில் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, பின் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். அவரின் மீதான மோசடி வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. 

Senthil balaji

அதிரடி சோதனை

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக கருதப்படும் நபர்களின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் ஆதரவாளர்களான கொங்கு மெஸ் சுப்பிரமணி, அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.எஸ் சங்கர் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. 

இதையும் படிங்க: ரூ.50 இலட்சம் நஷ்டத்தால் சோகம். மனைவி, குழந்தைகள் மரணம்., கணவன் கடிதம் எழுதி வைத்து மாயம்.!

துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் இன்று காலை வந்த அதிகாரிகள், மேற்கூறியவர்களின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: பெண்களுக்கு பாலியல் தொல்லை; இளைஞருக்கு தர்ம அடி.. இரயில் பயணத்தில் சம்பவம்.!