திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அப்படிப்போடு.. சாலை விபத்துகளில் உதவி செய்தால் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை.. அமைச்சர் சிவசங்கர் அதிரடி.!
விபத்துகளை குறைப்பதே அரசின் முக்கிய கடமை என்றாலும், விபத்தில் சிக்கியோரை மீட்டு உதவி செய்யவும் இன்றளவில் சவால்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதனை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமும் இந்தியாவில் 1 மணிநேரத்தில் 47 விபத்துகள் நடந்து 18 பேர் பலியாகின்றனர், ஒரே நாளில் 1130 விபத்துகள் ஏற்பட்டு 422 பேர் பலியாகின்றனர் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
விபத்துகளை குறைக்க அரசு சாலைகளின் தரம் உயர்த்துதல், வாகனங்களை தணிக்கை செய்தல் என பல விஷயங்களை தீவிரமாக மக்களிடையே அமல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இவ்வாறான விபத்துகள் ஏற்பட்டுவிடும் பட்சத்தில், அங்கு உதவி செய்வோருக்கு மாநில அரசு சார்பில் ரூ.5000 நிதிஉதவி ஊக்கத்தொகையாக வழங்கபடுகிறது.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசை போல, மாநில அரசின் சார்பிலும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.