திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
குடிகார கணவனால் விபரீதம்: தனிமையில் இளம்பெண் செய்த காரியத்தால் அதிர்ச்சி..!
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகேயுள்ள பொத்தனூர் கிராம பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன்(32). இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மீனாட்சி (25). இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
தியாகராஜனுக்கு குடிப் பழக்கம் இருந்து வந்துள்ளது. தினந்தோறும் வேலை முடிந்தவுடன் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதன் காரணமாக தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவர் குடிப்பழக்கத்தை கைவிடாததால் மீனாட்சி மன வேதனையுடன் காணப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று தனிமையில் இருந்த மீனாட்சி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த, அக்கம் பக்கத்தினர் மீனாட்சியை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கரூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிக்கிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு (தீபாவளியன்று) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மீனாட்சியின் பெற்றோர் பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது.