மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவனக்குறைவால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: அரசு மருத்துவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..!
ஈரோடு மாவட்டம், சாஸ்திரி நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஜீவா (40). இவர்களுக்கு 17 வருடங்களுக்கு முன்பு மனவளர்ச்சி குன்றிய பெண்குழந்தை பிறந்துள்ளது. முருகன், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் ஜீவா, வீட்டு வேலைகள் செய்து மகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் ஜீவா உடல்நலம் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு கர்ப்பப் பையில் கட்டி இருந்தது, மருத்துவ பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக அவர் கடந்த மாதம் 15 ஆம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனையில். அங்கு அவருக்கு ஜுன் 30 ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கட்டி அகற்றப்பட்டு உள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், ஜீவாவுக்கு நிற்காமல் சிறுநீர் வர தொடங்கியுள்ளது. இது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்த போது, , அறுவை சிகிச்சையின் போது சிறிய தவறு நடந்து விட்டதாகவும், அதற்கு சிகிச்சையளிக்க அங்கு போதிய வசதி இல்லாததால், சேலம் அல்லது கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும்படி கூறியுள்ளனர்.
இந்த நிலையில், மருத்துவர்களை அலட்சியத்தால் அதிர்ச்சியடைந்த ஜீவாவின் சகோதரி அமுதா, அவரது உறவினர் சிவசண்முகம் ஆகியோர், அறுவை சிகிச்சையின் போது கவனக்குறைவாக இருந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.