#Breaking: மருத்துவமனையில் தயாளு அம்மாள்.. நேரில் வந்த முக அழகிரி.!



MK ALagiri Arrives Chennai Apollo 

 

சென்னையில் உள்ள கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் அப்பலோ மருத்துவமனையில், திமுக தலைவர் & தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு நேற்று அனுமதி செய்யப்பட்டார். 

மருத்துவமனையில் அனுமதி

91 வயதாகும் தயாளு அம்மாள், வயது மூப்பு காரணமாக உடல்நிலை குன்றி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அப்பலோ மருத்துவமனைக்கு வந்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். 

இதையும் படிங்க: தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் இன்று.. பாஜக அண்ணாமலை, தவெக விஜய் வாழ்த்து.. விபரம் உள்ளே.!

MK Stalin

அழகிரி வருகை

அதனைத்தொடர்ந்து, தயாளு அம்மாள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், தற்போது திமுக மூத்த தலைவர் மற்றும் முக ஸ்டாலினின் சகோதரர் முக அழகிரி அப்பலோ மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். 

தாயாரின் உடல்நிலை குறித்து கேட்டறிய அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யதீங்கா - 'ஒன்றிணைவோம் வா' தமிழ்நாடு பாஜகவினருக்கு முதல்வர் வேண்டுகோள்.!