மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகத்தான வெற்றி; இந்தியாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் இவர்தான்; மனம் திறந்த முதல்வர் மு.க ஸ்டாலின்.!
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், ஆங்கில நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், செய்தியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு தனது பதிலை மு.க ஸ்டாலின் வழங்கி இருந்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி மற்றும் எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், "இந்தியாவின் நம்பிக்கை ராகுல் காந்தி தான். ராகுல் காந்தியின் பயணம் மகத்தான வெற்றி அடைந்துள்ளது.
அவர் இந்தியாவின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறார். இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகள் அணியின் அரசியல் இலக்கு என்பது நிச்சயம் வெற்றியை அடையும். பாஜகவின் ஆட்சியானது அகற்றப்படும்" என பேசினார்.