திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொளுத்தும் கோடை வெயில்.. CM ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு.!
கடந்த ஓரிரு மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் வெயிலின் தாக்கமானது மிகவும் கொடூரமாக இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் காலை 11 மணிக்கு மேல் மாலை 5 மணி வரை வெளியில் சாதாரணமாக செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வீட்டில் ஏசி மற்றும் ஃபேன் உள்ளிட்ட மின்சார பொருட்களின் பயன்பாடு வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்க துவங்கி விட்டது. இதன் விலையும் கூட கணிசமாக ஏறிவிட்டது என்றே கூறலாம். வெளியில் சென்றால் மட்டும் வெயிலின் தாக்கத்தால் அவதிப்படுவது இல்லை. வீட்டிலேயே இருந்தாலும் வெயிலின் தாக்கம் மிகக் கொடுமையாக இருக்கிறது.
எனவே, வீட்டில் இருப்பவர்களும், வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கோடை வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், நீர் சத்துள்ள காய்கறிகளை மக்களை சாப்பிட சொல்லியும், அதிகப்படியான தண்ணீரை அடிக்கடி குடித்துக் கொண்டே இருக்கவும் கூறியுள்ளார்.
மேலும், கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்டோரை வெயிலின் தாக்கத்திலிருந்து வீட்டில் இருப்பவர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் முக்கிய தேவைகள் இல்லாமல் வீட்டில் இருந்து வெளியே வருவதை தவிர்ப்பதால் வெப்பத்திலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் எனவும், அரசுடன் இணைந்து மக்களும் நல்ல ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.