விவசாயிகள் நலனுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.! விவசாயிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் அதிரடி.!



mk stalin request to central govt for farmer protest

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி போராட்டம் தொடங்கிய நிலையில் இதுவரை நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால் தொடர்ந்து போராட்டம் அரங்கேறி வருகிறது. 

இந்தநிலையில், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி இன்றுடன் ஆறு மாதம் நிறைவுபெறும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கோரிக்கையை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள், உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு முன்வராதது கவலை அளிக்கிறது.

இந்நிலையில் விவசாயிகள் நலனுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், சட்டப்பேரவைத் தேர்தலின்போது மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாகவும், விவசாயிகள் நலனுக்காக அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.