மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா.? நீட்டிப்பா.? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டும், 400 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
கொரோனா பரவலை தடுக்க கடந்த மே 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து கடந்த மே 24-ஆம் தேதி முதல் 31-ந் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனாலும் பரவல் கட்டுக்குள் வராததையடுத்து, ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்திய பிறகு கொரோனா பரவலின் வேகம் படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது. இதனால், ஊரடங்கு தளர்வுகள் இன்றி நீட்டிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் அளிக்கப்படுமா? என்பது குறித்து இந்த ஆலோசனையில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.