பிறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் பச்சிளம் குழந்தையைக் கொன்ற தாய்! பதறவைத்த சம்பவம்!



mom killed her child.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூரை சேர்ந்தவர் குமார். இவர் கூலி தொழில் செய்துவந்துள்ளார். இவருக்கும் சோலையம்மாள் என்ற பெண்ணிற்கும் திருமணமான நிலையில் ஒரு பெண், 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சோலையம்மாள் மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி சோலையம்மாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இந்தநிலையில் அவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்துள்ளார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் கடந்த 15-ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

                                      policemen
இந்நிலையில் குழந்தை பிறந்த அடுத்த நாளே மருத்துவமனையில் இருந்த சோலையம்மாள் தனது குழந்தையுடன் மாயமானதால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்  ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், அவரைத் தேடி வந்த காவல்துறையினர், சென்னையில் சோலையம்மாளையும், அவரது காதலரான குமாரின் அண்ணன் பாபுவையும் கண்டுபிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்குள் இருந்த முறையற்ற உறவில் குழந்தை பிறந்ததால், குழந்தையைக் கொன்றுவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். குழந்தையின் உடலை சேவூரில் உள்ள விளைநிலத்தில் புதைத்து விட்டதாகவும், கூறியுள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.