மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தவர் திடீர் மரணம்.! அவரது பையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!!
ஆந்திரா ராஜமகேந்திரவரம் பகுதியில் மார்க்கண்டேஸ்வரர் என்ற கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலின் முன்பு கடந்த 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருபவர் காஞ்சி நாகேஸ்வரராவ். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
மேலும் அதனால் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கோவில் வாசலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து இதுகுறித்து ராஜமகேந்திரவர கோயில் அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நாகேஸ்வரராவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் வைத்திருந்த பைகளையும் கைப்பற்றி சோதனை செய்து பார்த்துள்ளனர்.
அப்பொழுது அந்த பையின் உள்ளே நாகேந்திர ராவ் ஒரு லட்சத்து 83 ஆயிரம் பணம் வைத்துள்ளார். இதனை கண்டு ஆச்சரியம் அடைந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் 15ஆண்டுகள் பிச்சை எடுத்த பணத்தை சிறுக சிறுக சேமித்து வைத்துள்ளார் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அப்பணத்தில் இருந்து 3000 ரூபாய் எடுத்து அவருக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டது. பின்னர் மீதமுள்ள பணத்தை கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பிற சாதுக்களின் நலனுக்கும், அன்னதானத்திற்கு பயன்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.