திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளக்காதலுக்கு இடையூறு.. பெற்றக் குழந்தைகளை அடித்து துன்புறுத்திய தாய் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி இந்த தம்பதியினருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பிரியா நித்திரவிளை பகுதியில் ஜெகன் என்பவரிடம் தனியாக வீடியோ எடுத்து தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் தனது குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த தனது மூன்று மகன்களை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். இதில் போலீசார் நடத்திய விசாரணையில் 3 மகன்களும் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது.
இதனிடையே மீட்கப்பட்ட சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில், தாய் பிரியாவும் அவரது கள்ளக்காதலன் ஜெகனும் சேர்ந்து தங்களை அடுத்து துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறிதாக கூறியுள்ளனர். இதனையடுத்து பிரியா மற்றும் கள்ளக்காதலன் ஜெகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையறிந்த இவர்கள் இருவரும் தலைமறைவாகினர். இந்த நிலையில் நேற்று இரவு பிரியா தனது பெண் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த போலீசார் பிரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம் தலைமறைவாக உள்ள ஜெகனை தேடி வருகின்றனர்.