மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உயிரை பறித்த கள்ள உறவு... 2 பிள்ளைகளின் தாய் கொடூரமாக கொலை.!! காதலன் வெறி செயல்.!!
புதுச்சேரியில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நடுத்தர வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி கல்குவாரியில் வீசி இருக்கிறார். இது தொடர்பாக உடலை கைப்பற்றிய காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி டிரைவருடன் கள்ளக்காதல்
புதுச்சேரி நெட்டம்பாக்கத்தை அடுத்த வடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் இளவரசி(36). இவரது கணவன் பெயர் புருஷோத்தமன். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த இளவரசி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இளவரசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான கிருஷ்ணப்பன் என்பவருக்குமிடயே கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கிருஷ்ணப்பன் அடிக்கடி இளவரசியின் வீட்டுக்கு சென்று வந்திருக்கிறார்.
மாயமான இளவரசி
கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி இரவு இளவரசி வீட்டிலிருந்து திடீரென மாயமானார். இதனையடுத்து அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் இளவரசியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து இளவரசியின் தாய் நெட்டம்பாக்கம் காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் கொடுத்தார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தீவிரமான விசாரணையில் இறங்கினர். இந்த விசாரணையில் இளவரசிக்கும், கிருஷ்ணப்பனுக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு தெரிய வந்திருக்கிறது. இதன் பிறகு கிருஷ்ணப்பனை டார்கெட் செய்த காவல்துறையினர் அவரிடம் தங்கள் பாணியில் விசாரணையை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: "தீபாவளிக்கு வீட்டுக்கு வாயா மஜாவா இருக்கலாம்.." ஓனருடன் கள்ளக்காதல்.!! கணவன் கொலை.!!
கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கல்குவாரியில் வீச்சு
காவல்துறையின் கிடுக்குப்பிடி விசாரணையில் இளவரசியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார் கிருஷ்ணப்பன். இது தொடர்பாக காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், கடந்த ஒன்பதாம் தேதி இரவு இளவரசியின் வீட்டிற்கு சென்றதாக தெரிவித்திருக்கிறார். அப்போது இளவரசிக்கும் அவருக்குமிடயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளவரசியை தாக்கி இருக்கிறார். இதில் மயக்கமடைந்த இளவரசியின் கழுத்தை கயிறால் நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை சாக்கு முட்டையில் கட்டி தனது இரு சக்கர வாகனத்தில் வைத்து தமிழக பகுதியில் உள்ள கல்குவாரியில் வீசிவிட்டு வந்திருக்கிறார்.
உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு
இதனைத் தொடர்ந்து திருவக்கரை பகுதியிலுள்ள கல்குவாரிக்கு கிருஷ்ணப்பனை அழைத்துச் சென்ற போலீசார் அங்கு சாக்கு முட்டையில் சுற்றி வீசப்பட்ட இளவரசியின் சடலத்தை மீட்டனர். இதனைத் தொடர்ந்து இளவரசியின் உடல் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கிருஷ்ணப்பன் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: "உன் பொண்டாட்டி கிட்ட போட்டு கொடுக்கிறேன் இரு.." கள்ளக்காதல் விவகாரம்.!! கோர முடிவு.!!