வாக்குச்சாவடிக்கு வந்த ஆம்புலன்ஸ்..!! பிபிஇ கிட் உடையுடன் இறங்கிய நோயாளி!! யாருனு பார்த்தா!! அட.. நம்ம திமுக முக்கிய புள்ளி..



MP Kanimozhi came with corona kit and cast her vote

தேர்தல் குரித்து தமிழகமே பரபரப்பாக இருந்த நிலையில், தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்துள்ளநிலையில் வரும் மே மாதம் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்று மாலையே முடிவு அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்நிலையில் நேற்று நடந்து முடிந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 71% வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது.

காலை 7 மணியில் இருந்து மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார். அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மக்களுக்கும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி கொரோனா நோயாளிகள் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்கலாம் எனவும், அவர்கள் வாக்கு சாவடிக்கு வரும்போது முழு கவச உடையுடன் வந்து வாக்களிக்கச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

corona

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்து தேர்தல் நெருங்கும்வரை திமுக கட்சி வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரம் செய்துவந்த திமுக எம்பி கனிமொழி அவர்கள் சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஒதுங்கியிருந்த நேரத்தில், மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்து முழு கவச உடையுடன் சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்து ஜனநாயகக் கடமையாற்றினார் கனிமொழி.