மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போன் அழைப்பை எடுக்காத நண்பன் கொடூர கொலை: 16 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, சம்பாதிநகர் பகுதியில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவருக்கு 19 வயதுடைய ஆதர்ஷ் என்ற நண்பர் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஆதர்ஷ்க்கு புதிய நண்பர்கள் கிடைத்ததால், அவர் 16 வயது சிறுவனுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். மேலும் போன் செய்தாலும் அதனை எடுத்துப் பேசாமல் இருந்திருக்கிறார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில், கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவன், 19 வயது இளைஞனை கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இதில் படுகாயமடைந்த ஆதர்ஷ் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக 16 வயது சிறுவனை கைது செய்து நடத்திய விசாரணையில், தனது போன் அழைப்பினை எடுக்காததன் காரணமாகவே ஆத்திரமடைந்து கொலையை செய்ததாக தெரிவித்துள்ளார்.