குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
எக்ஸ்ட்ரா சாம்பார் கேட்டதால் ஏற்பட்ட தகராறு.. ஒருவர் அடித்துக்கொலை!
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் மெயின் ரோட்டில் இயங்கி வரும் பிரபல உணவகத்தில் மேற்பார்வையாளராக அருண் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இந்த உணவகத்திற்கு அனகாபுத்தூரை சேர்ந்த சங்கர் மற்றும் அவரது மகன் அருண் குமார் என்பவரும் பார்சல் வாங்க வந்துள்ளனர்.
இந்த நிலையில் உணவு பார்சல் வாங்கிய பிறகு கூடுதலாக சாம்பார் கேட்டதாக கூறப்படுகிறது. கூடுதல் சாம்பார் தர உணவக ஊழியர் மறுத்ததால் தகராறு ஏற்பட்டு காவலாளி மதன் குமார் என்பவரை தாக்கியுள்ளனர். இதனைத் தட்டிக்கேட்ட சூப்பர்வைசர் அருணை தாக்கியதில் அவர் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் தந்தை மற்றும் மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.