பைனான்சியரிடம் ரூ.15லட்சம் வழிப்பறி செய்த மர்ம கும்பல்.. போலீஸ் வலைவீச்சு.!



Mysterious gang that robbed a financier of Rs. 15 lakhs.. Police raid.!

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவர் ஆந்திரா, சித்தூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து வசூல் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு தனது காரில் ஓட்டுனருடன் வசூலுக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து பைனான்சியர் சரவணன் வசூல் செய்த ரூ.15 லட்சம் பணத்துடன் கத்தாரிக்குப்பம் வழியாக காரில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சரவணன் காரை நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பின் தொடர்ந்து சென்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கத்தாரிக்குப்பம் அருகே பைனான்சியர் சரவணனின் காரை அந்த மர்ம கும்பல் வழி மறித்துள்ளது. 

robbery

இதனையடுத்து பைனான்சியர் சரவணனிங கார் கண்ணடியை உடைத்து கத்தி முனையில் ரூ.15 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து அந்த மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மர்ம கும்பல் விட்டுச் சென்ற காரை வைத்து ஆய்வு மேற்கொண்டு அதன் உரிமையாளரை அழைத்து விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேர் பெங்களூருவைச் சேர்ந்த எல்லப்பன் மற்றும் சென்னவீரப்பா என்று அறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் பொன்னை அணைக்கட்டில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்த நிலையில் போலீஸார் அங்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்து கொள்ளையர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

robbery

மேலும் கொள்ளைச் சம்பவத்தில்  தொடர்புடைய மற்றும் இருவரை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் கத்திமுனையில் ரூ.15 லட்சம் பைனான்சியரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.