திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருச்சியில் பரபரப்பு.... தர்காவை இடித்த மர்ம நபர்கள்... இஸ்லாமியர்கள் போராட்டம்... விரைவில் நடவடிக்கை உறுதி .!
திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை அருகே இருந்த அண்ணார் பாக் தர்கா நேற்று இரவு மர்ம நபர்களால் இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வக்பு வாரியம் புகார் அளித்துள்ளது.
திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை அருகே செயல்பாட்டிலிருந்து வந்த அண்ணார் பாக் தர்கா நேற்றிரவு மர்ம நபர்களால் இடிக்கப்பட்டு இருக்கிறது. பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இந்த தர்கா முற்றிலுமாக அகற்றப்பட்டிருப்பது அங்குள்ள முஸ்லிம் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வக்பு வாரியத்திற்கு சொந்தமான 194 சென்ட் நிலம், நான் ஒரு சதுர அடியில் அமைக்கப்பட்டிருந்த தர்காவை எடுத்து தரைமட்டமாக்கிய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யக்கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக இந்த தர்காவை பராமரித்து வந்த பஷீர் அகமது என்பவர் தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக இஸ்லாமியர்களிடம் உறுதியளித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர் . தர்கா இடிக்கப்பட்ட சம்பவம் இஸ்லாமிய மக்களிடம் திருச்சியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.