மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பை! வெடிகுண்டு பீதியால் பெரும் பதட்டம்!
சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம் பகுதியில் கார் நிறுத்திமிடத்தில் நேற்று, பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்துள்ளது. இதனை பார்த்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விமான நிலையத்தில் கைப்பை குறித்து ஒலிபெருக்கியில் அறிவிப்பு தெரிவித்தும், யாரும் அந்த கைப்பையை உரிமைகோர முன்வரவில்லை. இதனால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகித்து அந்த பகுதி முழுவதும் கயிறுகட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்தனர்.
மோப்ப நாயுடன் அருகில் சென்று கைப்பையை எடுத்து சோதனை செய்தனர். அந்த பையில் அதில் ஆதார் அட்டை உள்ளிட்ட சில ஆவணங்கள் மட்டுமே இருந்துள்ளன. இதனையடுத்து நேற்று மாலை டெல்லியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய கைப்பையை தொலைத்துவிட்டதாக வந்துள்ளார். அங்குள்ள அதிகாரிகள் அப்பெண்ணிடம் இனிமேல் இவ்வாறு நடக்கக்கூடாது என எச்சரித்து கைப்பையை கொடுத்து அனுப்பினார்.