திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ஜாலியா வாங்க, அடிக்கிற வெயிலுக்கு குளுகுளுன்னு காத்தாட பயணியுங்க" - அரசுப்பேருந்தின் வேறலெவல் அப்டேட்.!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் என்பது கடுமையான அளவு அதிகரித்து இருக்கிறது. இன்னும் 5 நாட்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நண்பகல் நேரங்களில் அவசியம் இன்றி மக்கள் வெளியே வர வேண்டாம். தொழிற்சாலைகளில் பகல் நேரங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் இயற்கையான பழச்சாறுகள், இளநீர், எலுமிச்சை சாறு, வெள்ளரி, தர்பூசணி போன்ற பழங்கள் மற்றும் பானங்கள் மீது கவனம் செலுத்துவதால் அதன் விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நாகப்பட்டினம் பகுதியில் பயணம் செய்த பேருந்து ஒன்று, பின்பக்க கண்ணாடி இல்லாமல் பயணத்தை தொடர்ந்தது. இதனை வீடியோ எடுத்த வாகன ஓட்டி ஒருவர், சமூக வலைத்தளங்களில் வெளியிட அப்பதிவு வைரலாகி வருகிறது.
வீடியோ நன்றி: நியூஸ் தமிழ் 24x7