திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழக மீனவர்களை அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்த இலங்கை கடற்கொள்ளையர்கள்..!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆரியநாடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் பைபர் படகை சொந்தமாக வைத்துள்ளார். இந்த பைபர் படகில் சுப்புராஜ், அவரின் மகன் வசந்தபாலன் (வயது 25), இதே கிராமத்தை சேர்ந்த நிர்மல், மணிகண்டன், தில்லை நாதன் ஆகியோர் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
நள்ளிரவு நேரத்தில் வேதாரணயம் - கோடியக்கரைக்கு தென்கிழக்கில், நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த நிலையில், இலங்கை கடற்கொள்ளையர்கள் இரண்டு படகில் வந்து, தமிழக மீனவர்களான 4 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி இருக்கின்றனர்.
மேலும், படகில் இருந்த மீன்கள், 2 செல்போன்கள், ஜி.பி.எஸ் கருவி, வலைகள், படகு எஞ்சின் உட்பட 3 இலட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து, ரப்பர் படகில் குண்டுகளை வீசி தப்பி சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மீனவர்கள், அவசர அவசரமாக ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு வந்து மீனவர்களிடம் விஷயத்தை கூறியுள்ளனர்.
அவர்களின் உதவியுடன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், இவர்களில் மணிகண்டன் மற்றும் தில்லைநாதன் மேல் சிகிச்சைக்கு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் கடலோர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வேதாரண்யம் மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கி இருந்த நிலையில், மீண்டும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இலங்கை கடற்படை, இலங்கை கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி அட்டகாசம் செய்து வரும் நிலையில், இலங்கை அரசோ இந்திய அரசிடம் இருந்து ஆயிரம் கோடி கணக்கில் கடன் பெற்று வருகிறது.