மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆ., போட்டோ அனுப்பு.. 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்; ஒன்றுசேர்ந்து ஆப்படித்த மாணவிகள்.!
டியூசன் நடத்தி வந்த உடற்கல்வி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கத்தரிப்புலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அசோகன். இவர் வீட்டில் தனியாக டியூசனும் எடுத்து வந்துள்ளார். இவரது டியூஷனில் உள்ளூரை சேர்ந்த மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில், தனது டியூஷனில் பயின்று வரும் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பி, அவர்களையும் ஆபாச புகைப்படங்களை அனுப்ப வற்புறுத்தி இருக்கிறார். உடற்கல்வி ஆசிரியராக இருப்பதால் மாணவிகளை விளையாட்டு போட்டிகளுக்கு என அழைத்து செல்லும் நேரத்திலும் பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 15 மாணவிகள் ஒன்றாக சேர்ந்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கவே, அவர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு விஷயத்தை தெரியப்படுத்தி இருக்கிறார். இதனையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவிகளுக்கு ஆசிரியர் அசோகன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, தனக்கு எதிராக மாணவிகள் திருப்புகிறார்கள் என்ற தகவலை அறிந்த அசோகன் திடீர் மருத்துவ விடுப்பு பெற்று தலைமறைவாகியுள்ளார்.
இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் அசோகனின் செல்போன் நம்பரை வைத்து அவரை டிராக் செய்து அதிரடியாக கைது செய்தனர். கைதான உடற்கல்வி ஆசிரியர் அசோகன் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.