மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தையின்மை, கடன் தொல்லையால் விரக்தி; மின்கம்பியை பிடித்து தம்பதி தற்கொலை.!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதியில் வசித்து வருபவர் குமரேசன் (வயது 35). இவரின் மனைவி புவனேஸ்வரி (வயது 28). தம்பதிகள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இவர்களுக்கு தற்போது வரை திருமணம் நடைபெற்று முடியவில்லை. மேலும், இருவருக்கும் குழந்தை இல்லை. கடன் சுமையும் அதிகரித்து வந்ததால், கடந்த சில மாதங்களாகவே விரக்தியில் வாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்திற்கு தெரிந்ததால் சோகம்; ஜோடியாக தற்கொலை செய்து சாவு.!
மின்கம்பியில் கை வைத்து தற்கொலை
இந்நிலையில், இன்று காலை நேரத்தில் வீட்டின் மாடிக்குச் சென்ற தம்பதி, இருவருமாக சேர்ந்து மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்துகொண்டனர். உடலில் மின்சாரம் பாய்ந்ததால், தூக்கி வீசப்பட்ட இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மேற்கூறிய தகவல் அம்பலமாகி இருக்கிறது.
இதையும் படிங்க: காதலனின் வீட்டில் காதலி மர்ம மரணம்.. உடலெல்லாம் காயங்கள்.. பெற்றோர் கண்ணீர் குமுறல்.!