மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பல்சர் பைக்குகள் டார்கெட்; நாகபட்டினத்தை அலறவிட்ட திருட்டு கும்பல் கைது., அசந்து உறங்கியபோது அகப்பட்ட சம்பவம்.!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணயம், வாய்மேடு காட்டுப்பகுதியில் 3 இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் அயர்ந்து உறங்கியுள்ளனர்.
இவர்களை கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அங்கு நடந்த விசாரணையில் இவர்கள் பல்சர் பைக் திருடும் கும்பல் என்பது உறுதியானது. இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் சிறார்கள் ஆவார்கள்.
இந்த கும்பலிடம் இருந்து 5 பல்சர் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.