மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தந்தை, மகன், தாத்தா என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு; நாகையில் நடந்த துயரம்..!
உடல்நலக்குறைவால் தந்தை உயிரிழக்க, மகனும் - தாத்தாவும் என அடுத்தடுத்த 3 பேரின் உயிரிழப்பால் கிராமமே சோகத்தில் இருக்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, காமேஸ்வரம், வேடர்காடு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். மனைவி தேன்மொழி. தம்பதிகளுக்கு கோகுல் நிவாஸ் (வயது 14) என்ற மகன் இருக்கிறார். இவர் காமேஸ்வரம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பன்னீர் செல்வத்தின் பழைய வீட்டில் இருந்து, புதிய வீட்டிற்கு மின்னனைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. அப்போது, கோகுல் நிவாஸின் மீது மின்சார வயர் பட்டதில், அவரின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது.
தூக்கி வீசப்பட்டு மயங்கிய கோகுல் நிவாஸ் குடும்பத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மருத்துவமனையில் நிவாஸின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கோகுலின் குடும்பத்தினர் சோகத்தில் இருந்தனர்.
கோகுலின் தந்தைவழி தாத்தா இளங்கோவனும் (வயது 75), பேரனை இழந்த துக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில், அவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். வீட்டில் மயங்கிய நிலையில் இருந்தவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக கீழையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோகுல் நிவாஸின் தந்தை பன்னீர் செல்வம் கடந்த 6ம் தேதி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
இதனிடையே, அடுத்தடுத்து சில நாட்களுக்குள் பன்னீர் செல்வத்தின் மகன் மற்றும் தந்தை என 3 ஆண்கள் ஒரே குடும்பத்தில் உயிரிழந்து இருக்கின்றனர். இந்த தகவல் அக்குடும்பத்தை மட்டுமல்லாது, கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.