மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் மனைவி மீது சந்தேகம்; ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கணவன்..!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், தகட்டூர் பகுதியை சேர்ந்தவர் முரளி என்ற சுரேஷ் (வயது 32). இவர் சென்னையில் கார் ஒட்டி வருகிறார். இவரின் மனைவி மீனா. தம்பதிகள் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இந்த தம்பதிகளிடையே ஏற்பட்ட அன்பின் அடையாளமாய் பெண் குழந்தை, ஆண் குழந்தை என 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில், கணவன் - மனைவி இடையே சந்தேக பிரச்சனை இருந்ததாக தெரியவருகிறது.
நேற்று முன்தினம் சுரேஷ் தனது மாமனாரின் வீட்டில் இருந்த மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு தம்பதிகளுக்கிடையே மீண்டும் தகராறு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சுரேஷ், மீனாவை தேங்காய் உரிக்கும் கம்பியால் பலமாக தாக்கியுள்ளார்.
பின், ஆத்திரத்தில் மனைவியை அடித்துவிட்டோமே என உடனடியாக திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை நிறைவடைந்து, மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் மீனா அனுமதிக்க அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால், அவரின் உயிர் வழியிலேயே பறிபோனது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.