தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பரோலில் வெளிவந்த நளினிக்கு இப்படியொரு நிலைமையா? தற்போது எங்குள்ளார் தெரியுமா?
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நளினி தனது மகள் ஹரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய தன்னை 6 மாதம் பரோலில் விடுவிக்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நளினியின் மனு குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், நளினியை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது.அதுமட்டுமின்றி அரசியல்வாதிகள், இயக்கவாதிகளை சந்தித்து பேட்டியளிக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து பரோலில் வந்த நளினிக்கு யாரும் தங்குவதற்கு வீடு தரவில்லை என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து திராவிட இயக்க தமிழர் பேரவையை சேர்ந்த சிங்கராயர் என்பவரே அவரது வீட்டில் தங்கி திருமண ஏற்பாடுகள் செய்ய உதவி வருகிறார்.
இதுகுறித்து சிங்கராயர் கூறுகையில், நான் பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் ஆனால் 30 வருடங்களாக வேலூரில் வசித்து வருகிறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு நளினியை தெரியாது, நான் அவரை பார்த்தது இல்லை. ஆனால் இந்த பிரச்சனை தொடர்பான போராட்டத்தில் 15 ஆண்டுகளாக நான் பங்கேற்று வருகிறேன்.
இந்நிலையில் பரோலில் வெளிவந்து நளினி தங்குவதற்கு சில இடங்களில் ஏற்கனவே கேட்டுள்ளனர். ஆனால் பயத்தில் யாரும் உதவிசெய்ய முன்வரவில்லை. பின்னர் நளினி வழக்கறிஞர் என்னிடம் கேட்டதை தொடர்ந்து நான் ஒத்துக்கொண்டேன். அவருக்கு என் வீட்டில் சமைக்கும் உணவுதான் கொடுக்கப்படுகிறது என கூறியுள்ளார்.