மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசையாக சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்; பறிபோன உயிர்.. நாமக்கல்லில் சோகம்.!
நாமக்கல் நகரின் பேருந்து நிலையத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 8 மணியளவில் எருமைப்பட்டி பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் பகவதி, சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டு இருக்கிறார்.
அதனைத்தொடர்ந்து, அவர் 7 சிக்கன் ரைஸ் வாங்கி, அதனை வீட்டில் உள்ள தாய் நதியா (37), சகோதரர் கௌசிக் (வயது 18), தாத்தா சண்முகம் (வயது 67), பாட்டி பார்வதி (வயது 63), சித்தி பிரேமா (வயது 35), அவரின் இரண்டு குழந்தைகள் ஆகியோருக்கு கொடுத்துள்ளார்.
இதில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நதியா மற்றும் சண்முகம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, கவலைக்கிடமான சண்முகம் தற்போது பலியாகினர். இதனால் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.