மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் வீட்டுக்கு ஏன் தண்ணி வரலை? ஊராட்சிமன்ற தலைவியின் கணவருக்கு பளார் விட்டதால் பாய்ந்த பி.சி.ஆர்.!
தண்ணீர் திறந்து விடாத ஆத்திரத்தில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் தாக்கப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் வில்லிபாளையம் ஊராட்சி மன்ற தலைவி சங்கீதா. இவரது கணவர் நடராஜன். இவர் அங்குள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் திறந்து விடும் பணியை கவனித்து வந்துள்ளார்.
இவரது ஊராட்சியை சேர்ந்த சதீஷ் குமார் என்பவரின் வீட்டிற்கு தண்ணீர் வரவில்லை என்று தெரிய வருகிறது. இதனால் நடராஜனுக்கு தொடர்பு கொண்டு எதற்காக தனது வீட்டிற்கு தண்ணீர் வரவில்லை? என்று கேட்டு இருக்கிறார்.
இது குறித்த வாக்குவாதம் போனில் முற்றவே, நேரில் புறப்பட்டுச் சென்று சதீஷ்குமார் நடராஜனின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதில், காதல் காயம் ஏற்பட்ட நிலையில், நடராஜன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக சங்கீதா அளித்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சாதிய வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.