மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்லாத ஊருக்கு நடத்துனரிடம் டிக்கெட் கேட்டு ரகளை; நடத்துனரின் சட்டையைப்பிடித்து மல்லுக்கட்டிய போதை ஆசாமி..!
மதுபோதையில் பேருந்தில் ஏறிய குடிகாரன், நடத்துனரிடம் ரகளை செய்து அவரை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. அன்புடன் பதில் கூறிய நடத்துனரே ஒருகட்டத்தில் பொறுமையை இழந்து செயல்பட்ட சம்பவம் நடந்த்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், புதிய பேருந்து நிறுத்தத்தில் இருந்து காரவள்ளி செல்ல அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல அரசு பேருந்து காரவள்ளி நோக்கி பயணம் செய்தது.
இந்த பேருந்தில் ஏறிய போதை ஆசாமி, பேருந்து செல்லாத இடத்திற்கு சீட்டு கேட்டு ரகளை செய்துள்ளார். ஆசாமியிடம் பேருந்து அங்கு செல்லாது, மாற்று பேருந்தில் ஏறி பயணம் செய்யுங்கள் என்று அன்புடன் எடுத்து கூறியும் கேட்கவில்லை.
நடத்துனரின் அறிவுரையால் ஆத்திரமடைந்த குடிகாரன், நடத்துனரிடம் வாக்குவாதம் செய்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளான். ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த நடத்துனர் பதில் தாக்குதலும் நடத்தியுள்ளார்.
பேருந்துக்குள் நடந்த ரகளையில் பதறிப்போன மக்கள் ஓட்டுனரிடம் பேருந்தை நிறுத்தச்சொல்லியுள்ளனர். பேருந்து நின்றதும் நடத்துனரும் - போதை ஆசாமியும் நடுரோட்டில் சண்டையிட்டுள்ளனர். இதனை அவ்வழியே சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் நடத்துனரை சமாதானப்படுத்தினர். மேலும், இந்த ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.