ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நாமக்கல்: 85 வயதிலும் இளம் தலைமுறைக்கு நீச்சல் பயிற்சி..! அசத்தும் மூதாட்டி.. வயது என்பது எண் மட்டுமே..!!
வயது என்பது எண். மன உறுதி, விடாமுயற்சி இருந்தால் எந்த வயதிலும் எதுவும் முடியும் என்பது முன்னோர்கள் வாக்கு. தள்ளாடும் வயதில் மூதாட்டி இளைஞர்களுக்கு நீச்சல் பயிற்சி கற்றுக்கொடுத்து உற்சாகத்துடன் உள்ளதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், வேணந்தூர் பகுதியை சார்ந்தவர் பாப்பா (வயது 85). இந்த மூதாட்டிக்கு 5 வயது இருக்கையில், தனது தந்தையுடன் கிணற்றுக்கு சென்று வருவது வழக்கம். சிறுமியின் தந்தை பலருக்கும் நீச்சல் கற்றுக்கொடுத்த நிலையில், அப்போது பாப்பாவும் நீச்சல் பால்கி இருக்கிறார்.
தந்தையை ஆசானாக ஏற்றுக்கொண்டு பாப்பா பலவகையான நீச்சலை கற்றுக்கொண்ட நிலையில், தற்போது அதனை பிறருக்கும் பயிற்றுவித்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்கள், சிறுமிகள் என பலருக்கும் தனக்கு தெரிந்த நீச்சல் கலைகளை 85 வயதிலும் கிணற்றில் வைத்து கற்றுக்கொடுக்கிறார்.
இதுகுறித்து மூதாட்டி பாப்பா பேசுகையில், "எனக்கு 5 வயது இருக்கும் போதே தந்தையிடம் இருந்து பலவகை நீச்சலை கற்றுக்கொண்டேன். அம்மா - அப்பா துணிதுவைக்க கிணற்றுக்கு செல்லும் போது, அவர்களுடன் நானும் நீரை செல்வேன். அப்போது தந்தையின் உடையை பிடித்துக்கொண்டு நீந்தி பழகினேன். பொழுதுபோக்காக நீச்சல் அடிக்க ஆரம்பித்தது, பின்னாளில் பழக்கமாகிவிட்டது.
எனது மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கும் நான் நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளேன். என்னிடம் 5 வயது முதல் 40 வயது வரை உள்ள பலரும் நீச்சல் கற்றுக்கொள்ள வருகிறார்கள். வயதானாலும் கற்பிக்கும் ஆர்வம் தொடர்வதால், அவர்களுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்து வருகிறேன்" என்று தெரிவித்தார்.