மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
+2 தேர்வில் சிக்கிய 1 கிலோ மைக்ரோ பிட்டு பேப்பர்கள்... அச்சடித்த ஜெராக்ஸ் கடையில் விசாரணை..!
12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு கணிதத்தேர்வு நடைபெற்ற நிலையில், சுமார் 1 கிலோ அளவு மைக்ரோ பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக தேர்வுத்துறை இணை இயக்குனர் பொன்குமார் தலைமையில் பறக்கும் படையினர் மாணவர்களை பரிசோதனை செய்தனர்.
அப்போது குமாரபாளையம் பகுதியில் 20 மாணவர்கள், கொல்லிமலையில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், பள்ளிபாளையம் பகுதியில் 3 மாணவர்களிடம் சுமார் 1 கிலோ எடையுள்ள மைக்ரோ பிட்டு பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பறக்கும் படையினர், மைக்ரோ பிட் எடுத்து ஜெராக்ஸ் கடையில் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.