நாமக்கல்: கேடி மாமியாரும், கேப்பில் கிடா வெட்டிய மருமகளும்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கப்பட்ட மாமியார்.. திடுக் பின்னணி.!

ஆசை யாரை விட்டது என்பதைப்போல, மகன் தனது விருப்பப்படி திருமணம் செய்தலும், மருமகளை ஏற்றுக்கொள்ளாமல், அவரை விட்டு வா, சொத்தும்-புத்தம் புது திருமணமும் செய்து வைக்கிறேன் என ஆசை காட்டிய மாமியாரை, மருமகள் திட்டமிட்டு போட்டுத்தள்ள முயற்சித்த பயங்கரம் திருச்செங்கோட்டில் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு, குச்சிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் தனலட்சுமி (வயது 77). சம்பவத்தன்று இவரின் வீட்டிற்கு வந்த மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செவிலியர், மருந்து ஒன்றை குடித்ததாகவும், அதனால் வாந்தி-பேதி ஏற்பட்டு உயிருக்கு போராடுவதாகவும் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: தமிழகமே சோகம்.. தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தாய், 2 குழந்தைகள் மரணம்..!
மூதாட்டிக்கு உடல்நலக்குறைவு
தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து விசாரித்துவிட்டு, மருத்துவத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி இருக்கின்றனர். அப்போது, தங்களின் தரப்பில் யாரும் குச்சிபாளையம் கிராமத்திற்கு செல்லவில்லை என கூறியுள்ளனர். இதனால் நிகழ்விடத்தில் இருந்த செல்போன் சிக்னல் ஆராயப்பட்டது.
அப்போது, தனலட்சுமிக்கு சிகிச்சை அளிப்பதாக வந்தவர், கவுண்டம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் கோமதி என்பதும், இவர் டிப்ளோமா நர்சிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கடந்த 12 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
காதல் திருமணம் - தாயின் பேச்சு
அவரிடம் நடந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, தனலட்சுமியின் மகன் சரவணபெருமாள், காதல் திருமணம் செய்து மனைவி தமிழ்செல்வி, 2 குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார். மகனின் காதல் திருமணத்தில் விருப்பம் இல்லாத தனலட்சுமி, நீ மனைவியை கைவிட்டு தனியாக வந்தால், சொத்துக்களை உனது பெயருக்கு மாற்றி வைத்து, புதிய திருமணம் செய்து வைக்கிறேன் என மகனுக்கு ஆசை காண்பித்து இருக்கிறார்.
மருமகளின் திட்டம்
ஆனால், சரவணா பெருமாளோ மற்றொரு திருமணத்திற்கு உடன்படவில்லை என்றாலும், குடிபோதைக்கு அடிமையாகி, தினமும் மனைவியை துன்புறுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனிடையே, மாமியாரின் சொத்துக்களை தனதாக்க வேண்டும் என்றால், தனலட்சுமி உயிரிழந்தால் வாரிசு அடிப்படையில் கணவருக்கு சொத்துக்கள் வரும். பின் அதனை அபகரித்து கொள்ளலாம் என திட்டமிட்டு இருக்கிறார்.
ஆசையால் மோசம் போன நர்ஸ்
மாமியார் தனலட்சுமியை கொலை செய்ய தாய் பாப்பாத்தியிடம் தகவல் தெரிவித்த நிலையில், அவர் கோமதியிடம் விபரம் கூறியுள்ளார். முதலில் இந்த விசயத்திற்கு கோமதி உடன்படவில்லை எனினும், சொத்தில் பங்கு தருகிறேன் எனக்கூறி ஆசை வலை விரிக்கப்பட்டு இருக்கிறது.
கொலை முயற்சி
இவர்களின் திட்டப்படி சம்பவத்தன்று குச்சிபாளையம் கிராமத்திற்கு சென்ற கோமதி, தன்னை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இருந்து அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளதாக கூறியுள்ளார். உடல்நலக்குறைவுடன் இருந்த தனலட்சுமியை பார்க்க, அவரின் பேத்தியே விபரீதம் புரியாமல் வழி காண்பித்து இருக்கிறார். அங்கு விஷம் கலக்கப்பட்ட குளிர்பானத்தை தனலட்சுமிக்கு கொடுக்க, அது கசப்பதாக தனலட்சுமி தெரிவித்தபோதும், மருந்து அப்படிதான் இருக்கும் என சமாளித்து இருக்கிறார்.
மூவரும் கைது
இறுதியில் கோமதி புறப்பட சில நிமிடங்களில் மூதாட்டி உடல்நலக்குறைவை எதிர்கொள்ள, இறுதியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் இந்த தகவல் தெரியவந்தது. இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனலட்சுமியை கொலை செய்ய முயற்சித்த 3 பேரையும் கைது செய்தனர்.
சீரியல் பார்த்த தாக்கம் மேலோங்கி இருந்தால், புத்தி எந்த மாதிரியெல்லாம் யோசிக்கச் சொல்லும் என்பதற்கு உதாரணமாக மாமியாரும், மருமகளும், அவருக்கு உடந்தையாக இருந்தோரும் அமைந்துள்ளனர்.
இதையும் படிங்க: டீ குடிக்க மூட்டிய நெருப்பால் விபரீதம்; குடிசை வீடு எரிந்து பெண் மரணம்.!